Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நா குடிக்கல… அவள குடிக்க வச்சேன்… 17 வயது சிறுமியை விஷம் கொடுத்து கொன்ற காதலன்… 8 பேர் கைது…!!

சிறுமியை கடத்தி சென்று விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தொடர்பாக காதலன் உட்பட  8 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போன நிலையில் அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தபோது அந்த சிறுமி தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய மகன் நாகூர் ஹனிபா(29) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நாகூர் ஹினிபா காணாமல் போயிருக்கிறார். இதனால் சிறுமி நாகூர் ஹனிபா உடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3ஆம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் மயக்கத்தோடு சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.சிறுமி நிலையை பார்த்து துடிதுடித்து போன பெற்றோர் அந்த சிறுமியை உடனே  மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அப்போது  மருத்துவர் வழிகாட்டுதலின்  பேரில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கும் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக  இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனிடையே  நேற்று முன்தினம் நாகூர் ஹனிபாவை காவல் துறையினர் கைது செய்தனர்.அதன் பின் நாகூர் ஹனிபாவிடம் காவல்துறையினர்  நடத்திய விசாராணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நானும் சிறுமியும் காதலித்து வந்தோம். என் காதலியை  முதலில்  என்னுடைய  நண்பர் பெருமாள் கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று பின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எனது சித்தப்பா வீட்டிற்கு கூட்டி சென்றறேன். இதற்கு என்னுடைய பல நண்பர்கள் உதவினார்கள். இந்நிலையில் எனது தாயார் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுமி அழைத்து வா இல்லாவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்று கூறினார்.

இதனால் சிறுமியிடம் பயம் காட்டுவது போல் பேசினேன். பின் நாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அவளிடம் தெரிவித்தேன். கடையில் எலி மருந்து வாங்கி வந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன். நான் சாப்பிடவில்லை. அதன் பின் சிறுமி உடல்நிலை சரியில்லாமல் போனதால் நான் சிறுமியை மதுரைக்கு அழைத்து வந்து என் தாயாரிடம் விட்டுட்டுடேன்.  பின் எனது அம்மா சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார் என்று  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை   சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |