பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் .
நாங்களும் சமையல தான் நெனச்சோம் சார் 😜 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/MO8k1gOH1G
— Vijay Television (@vijaytelevision) September 11, 2021
இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சமையல் செய்து கொண்டே பேசிய கமல் ‘தாளித்துக் கொட்டி வைக்கிறதுகுள்ள ஒரே கலவரம் தான் போங்க. நான் சமையல பத்தி பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன நெனச்சீங்க. இந்த வீட்ல சுதந்திரமா எதையுமே பேச முடியாது போல இருக்கு’ என்று கூறுகிறார். தற்போது இந்த கலக்கலான புரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.