அண்மையில் நடிகை சாய்பல்லவி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: ” தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “வன்முறை என்பது என்னைப் பொறுத்தவரை தவறான பெயர்.
https://www.instagram.com/tv/Ce8xMmbFQ70/?utm_source=ig_web_copy_link
ஒடுக்கப்பட்டோர் பாதுகாக்கப்பட வேண்டும். யார் சரி, யார் தவறு என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால், ஒரு பகுதி மட்டுமே சரியானது என்று நீங்கள் உணர மாட்டீர்கள்.” என்றார். இதில் அவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சாய்பல்லவி வெளியிட்டுள்ள வீடியோவில் “நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்லவந்த கருத்தின் சாராம்சம்” என்று தெரிவித்துள்ளார்.