தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் நேர்காணலில் பேசிய அவர், நான் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்க்கையையே வசனமாக பேசுகிறேன். மக்களை படித்ததாலே காமெடியை ரசிக்கின்றனர். அப்படித்தான் இந்த படத்தில் ‘எனக்கு எண்டே கடையாதுடா’ என்ற வசனத்துடன் ஓபனிங் கொடுத்துள்ளோம் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.