தன் அம்மாவை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி அங்கன்வாடிக்கு செல்ல மாட்டேன் என குழந்தையின் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மட்டும் அல்லாமல் அங்கன்வாடிகளும் திறக்கப்படாமல் இருந்தது. கேரள மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது. வகுப்புகள் ஆரம்பித்த நேரத்தில் பல மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று நிலையில் அங்காடி செல்லும் குழந்தைகள் முதன்முதலாக தங்களது பெற்றோர்களை பிரிந்து செல்வதால் அழுகையுடன் பள்ளிக்கு வந்தனர்.
இதற்காக புத்தாடைகள் மற்றும் புதிய பைகளோடு குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அந்த மழலை முகங்கள் பல்வேறு பணிகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருந்தது. அதன்படி பெற்றோர்கள் இல்லாமல் முதன்முறையாக பள்ளிக்கூடம் செல்வதால் தான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்று குழந்தைகள் அழுகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆலப்புழா ஹரிப்பாடு அப்பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை தனது அம்மாவை பிரிந்து அங்கன்வாடிக்கு செல்லமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தது. சேட்டை செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறேன். படிப்பு எனக்கு பிடிக்காது, வேண்டாம் என்று அழுதுகொண்டே கூறியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.