Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார் எஞ்சின் பகுதியில் இருக்கும் பேட்டரியில் மின் வயிறு உரசி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |