மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு மோட்டூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியின் தாயார் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஊருக்கு வரும்போது மழை பெய்ததால் இருவரும் புளிய மரத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றனர். அப்போது பார்வதியை திடீரென மின்னல் தாக்கியது.
இதனால் மயங்கி விழுந்த பார்வதியை காப்பாற்ற சென்ற கார்த்திகேயனையும் மின்னல் தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.