இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் காந்தி உலக மையத்தின் சார்பாக மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு முன்னால் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொல்லியல் வர்த்தக ரீதியாகவும் மற்றவகையிலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித் துறையும் முன்னேறுகிற வாய்ப்புகள் அதிகம். தற்பொழுது இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருக்கின்றது. இவ்வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலக அளவில் ஒரு சிறப்பான இடத்தை நாம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.