Categories
சினிமா

நிக்கி கல்ராணியின் ரகசிய நிச்சயதார்த்தம்…. யாருடன் தெரியுமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நிக்கி  கல்ராணி. அதன் பிறகு குறுகிய காலத்தில் பல படங்களுக்கு ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும், கலகலப்பு போன்ற தமிழ் திரைப்படங்களில் சிறப்பா நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார்.

சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி ஆகிய இருவரும் காதலித்து வருவதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி  வந்தது. ஆனால் இது வதந்தியாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கும் நேரத்தில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக  நிச்சயதார்த்தம் நடந்தது  அனைவருக்கும் அதிச்சியை அளித்தது. இந்த நிச்சயதார்த்தத்தில் தமிழில் தன்னை அறிமுகப்படுத்தியவர்களை கூட அவர் அழைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு மொழியில் அவருக்கு வேண்டியவர்  மற்றும் வேண்டாதவர் என்று பலரையும் அழைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி உள்ளனர். இதையடுத்து நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு அவர் நடித்த  இடியட் எனும் திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. மிக விரைவில் நிக்கி கல்ராணியின் திருமணம் நடக்கும் எனவும்  கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகின்றன.

Categories

Tech |