உணவு பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இட்ரைட் சென்னை என்னும் திட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் இட்ரைட் மூமாட் என்ற இயக்கத்தை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள நகரங்கலையும் இட்ரைட் சேலஞ்யில் பங்குபெற செய்து உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் இட்ரைட் சென்னை திட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிள் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சின் போது பாதுகாப்பான உணவை எப்படி சமைப்பது மற்றும் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.