தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.
அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. இதற்கிடையில் நவீன்ரெட்டி என்ற நபர் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும், அவர் அந்த கும்பலை ஏவிவிட்டு பெண்ணை கடத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதன்பின் காவல்துறையினரின் பல மணி நேர நடவடிக்கைக்கு பிறகு வைஷாலியை பத்திரமாக மீட்டனர். மேலும் காவல்துறையினர் அந்த கும்பலை சேர்ந்த 18 பேரை கைது செய்துள்ளனர். எனினும் முக்கிய குற்றவாளி நவீன் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். இதனிடையில் வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நவீன் சுமார் 40 பேருடன் வீடுபுகுந்து அவரை கடத்தி உள்ளார்.