தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த பிரியா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் சம்மதித்ததால் நாளை(திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் தூங்க சென்ற பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை எழுப்பியபோது படுக்கையிலேயே அசைவின்றி கிடந்தார். உடனடியாக பிரியாவை மீட்டு தர்மபுரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரியா இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.