Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகாவில் இருக்கும் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவர் கேரளாவில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய இளைய மகளான 23 வயதுடைய தங்கதுரைச்சிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் தங்கதுரைச்சி அவரது தாயாரிடம் கிணற்றுக்கு சென்று குளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த  அவரது  தாய் மகளை தேடி கிணற்றுக்குச் சென்றுள்ளார்.  அந்த கிணற்றின் பக்கத்தில் தங்கதுரைச்சியின் ஆடை மற்றும் காலணி கிடந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் தேடி பார்த்துள்ளார். அந்த கிணற்றுக்குள் தங்கதுரைச்சி பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தேவர்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தங்கதுரைச்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தங்கதுரைச்சி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |