வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே பரனூர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் நிச்சயதார்த்த விழா விளந்தை பகுதியில் நடைபெற்றது. இதற்காக தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 21,000 பணம் திருடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தர்மலிங்கம் அரகண்டநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.