நடிகை ராஷ்மிகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரை சந்திக்க தெலுங்கானாவைச்ச சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி இந்த செய்தி பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் அங்கு ஊரடங்கு அமலில் இருந்ததால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார். இதற்காக ராஷ்மிகா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நிச்சயம் ஒருநாள் ரசிகர்களை சந்திப்பேன் என்றும் ரசிகர்கள் தன்னை சந்திக்க இவ்வளவு தூரம் நடந்து சந்திக்க வேண்டாம் எனவும் இணையதளத்தின் மூலமாக பேசிக்கொள்ளலாம் என்று உறுதி அளித்துள்ளார்.