அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது.
இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ வாழ்வில் தனது கேரக்டர் பற்றி அருள்நிதி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் படங்களில் மிகவும் சைலன்டாக இருப்பது போலவே நிஜத்திலும் சைலன்டாக தான் இருப்பேன். படங்களில் நடிப்பதும் அதன் பின்பு ப்ரோமோஷனில் ஈடுபடுவதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பேன். நான் ரொம்ப பிரைவேட்டான பர்சன். தேவைப்பட்டால் மட்டுமே சோசியல் மீடியாக்களில் வருவேன். மிகவும் ஆக்டிவாக இருப்பதில்லை. சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்துவதில்லை என கூறியுள்ளார். இவர் இவ்வாறு பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.