Categories
தேசிய செய்திகள்

“நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்ற 62 வெளிநாட்டவர் கர்நாடகாவிற்கும் வந்துள்ளனர்”: அமைச்சர் ஸ்ரீராமுலு

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 1,500 பேரில் 981 நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணித்தும் வருகிறது தமிழக சுகாதாரத்துறை. அதில் 67 பேர் கொரோனா பாதித்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, டெல்லியில் நிஜாமுதீன் சுற்றிவளைத்த போலீசார் அங்குள்ள 300க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் வைத்து சோதனை மேற்கொண்டுவருகிறது. அதில் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து டெல்லி மதநிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 பேர் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கொரோனா பதித்தவர்களில் 24 பேர் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். இந்த நிலையில், டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட 62 வெளிநாட்டவர் கர்நாடகாவிற்கு வந்து சென்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். 62 பேரும் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது அவர்களில் 12 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |