இயக்குனர் வெற்றிமாறன் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இதை அடுத்து இரண்டாவது படமான ஆடுகளம் மூலம் தேசிய விருதினை பெற்று முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணை, வடசென்னை, தற்போது அசுரன் என்ற படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இவர் படம் அனைத்தும் பல்வேறு கருத்துக்களை இந்த சமூகத்திற்கு எடுத்துக்கூறும் வகையில் இருக்கும்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளார். பட்டப்படிப்பு படித்த முதல் தலைமுறை பட்டதாரிகள் https://www.iifcinstitute.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். படங்களில் மட்டும் தனது அரசியலை பேசாமல் நிஜத்திலும் செய்து காட்டி ஹீரோவாக மாறியுள்ளார்.