2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 2-வது நாளாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று கூறினார். மக்கள் நலப்பணியாளர்களை முதன் முதலில் நியமித்தது திமுக ஆட்சியில்தான் என்று சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.