Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு….. 2 பெண்களுக்கு ஜாமீன்…!!

நிதி அமைச்சர் வாகனம் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இரண்டு பெண்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நிதியமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் மூன்றில் இரண்டு பெண்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தெய்வானை, தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக காலணி வீசியது தொடர்பாக 6 பேருக்கு கடந்த 22 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 பெண்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |