Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் பிடிஆர் ராஜினாமா?…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் ஸ்டாலினிடம் கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐடிவிங்கிற்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்ய புத்திரனை நியமித்திருப்பது தனது பவரை குறைக்கும் முயற்சி என்பதால் தனது எதிர்ப்பை காட்டும் விதமாக ராஜினாமா கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |