மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென பாஜகவினர் காரை வழிமறித்து காலனி வீசினர்.. மேலும் காரை சூழ்ந்து தாக்க முற்பட்டனர்.. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ கட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் தாக்குதல் என எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு. #PTR pic.twitter.com/dFsQOMTNpm
— Ezhumalai venkatesan (@kanchivenki) August 13, 2022