Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமாரை முதல்வராக பா.ஜ.க சம்மதிக்‍குமா …!!

குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் நிதிஷ்குமார் மீண்டும் பீகாரின் முதலமைச்சர் ஆவதற்கு சிவசேனா கட்சியே காரணம் என மகாராஷ்டிரா அரசியலை சுட்டிக்காட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவட் தெரிவித்துள்ளார்.

பீகாரின் கூட்டணி கட்சியான திரு. நிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவை விட குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இதனால் முதல்வர் பதவியை பாஜக விட்டு தருமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் மகாராஷ்டிரா சம்பவம் போல் பீகாரிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் அக்காட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் பீகாரின் முதலமைச்சராக மீண்டும் திரு. நிதிஷ்குமாரை தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் கூட்டணியில் குறைந்த இடங்களை வென்று இருந்தாலும் திரு. நிதிஷ்குமார் முதலமைச்சராக பாஜக வழிவிட்டால் அதற்கு நிதிஷ்குமார், சிவசேனா தான் நன்றி சொல்ல வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவட் விளக்கியுள்ளார். கொடுத்த வாக்கைக் கூட்டணி கட்சி காப்பாற்றவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சிவசேனா சரியான பாடம் கற்பித்ததை ராவட் சுட்டிக் காட்டியுள்ளார்.

Categories

Tech |