Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த தவணைத் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் 7,32,236 கையாடல் செய்திருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஐந்து பேரை தேடி வந்த நிலையில் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சிறையில் அடைத்தார்கள். மேலும் தலைமை மறைவாக இருக்கும் சுரேஷை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |