கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி அக்னி பாலம் என்ற பெயரில் ஆனந்தன், தனசேகரன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் அமுதா என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அமுதா 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக தெரிகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு வரை 1 3/4 கோடி சீட்டு பணம் கட்டியதாகவும், நிதி நிறுவனத்தினர் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு ஆனந்தனும், தனசேகரும் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தப்பி சென்றனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆனந்தன், தனசேகர் ஆகியோரின் சொந்த ஊருக்கு சென்ற விசாரித்த போது தேனி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்த இருவரும் மதுரை ரிசர்வ் காலனி பகுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்தனர். இது பற்றி அமுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனசேகர் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.