பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டிற்கான நிதி பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நடப்பாண்டிற்கான நிதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த மணீஷ் சிசோடியா பட்ஜெட்டிற்கு எதிரான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டின் நிதி பட்ஜெட்டில் குறைத்துள்ளது.
இதனால் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து அவர்களுக்கு எதிரான அம்சம் எந்த பட்ஜெட்டிலாவது இடம்பெறுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் விவசாயிகளின் ஊதியத்தை கடந்தாண்டில் இரட்டிப்பாக்குவோம் என்று பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.