Categories
உலக செய்திகள்

நிதி மோசடி வழக்கு….. பிரபல நாட்டு முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டில் ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து  டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் நேற்று நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் நியூயார்க் மகான் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் பல மணி நேரம் விசாரணை நடத்தினார். இதற்கு முன்பாக டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு தொடர்பான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Categories

Tech |