நித்தியானந்தாவின் குரு மடாதிபதி ஞானப்பிரகாசன் இன்று உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி ஞானப்பிரகாசம் நித்தியானந்தாவின் குரு. அவர் காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதினத்தின் என் 132வது மடாதிபதி. அவர் கடந்த சில நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 87 வயதுடைய மடாதிபதி ஞானபிரகாசம் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர் இறப்பதற்கு முன் நித்யானந்தாவை ஆளாக்கியது நான்தான் என்றும் நித்யானந்தா அழைத்தால் கைலாசம் செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.