திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜ தோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெயரில் சாமியார் பொது மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பட்டுப்புடவை நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வந்தது.
அதன் பின் இவர் தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் இவரை பலரும் கலாய்த்து பதிவிட்டு வந்துள்ளார்கள். ஆனால் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் ஆன்மீக கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மன் வேடத்தில் ஃபுல் மேக்கப்பில் தோன்றியுள்ளார். அவருக்கு அவரது பக்தர்கள் கற்பூரம் காட்டியும், பாத பூஜை செய்தும், மலர் பூஜை செய்தும் வழிபாடு நடத்தியுள்ளனர்.
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு இவர் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து யூடிபில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி வந்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றுள்ளனர். நித்தியானந்தாவும் முதலில் திருவண்ணாமலையில் தான் ஆசிரமம் நடத்தி வந்தார். அதன் பின் அவர் மிகப்பெரிய ஆளாக வளர்ந்துள்ளார். ஒருவேளை அன்னபூரணி அம்மாவும் அவர் வழியில் திருவண்ணாமலை ஆசிரமம் அமைத்துள்ளார் போலவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.