Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நின்று கொண்டு சாப்பிடாதீங்க… பல விளைவுகளை சந்திப்பீங்க ..!!

நாம் உண்ணும் உணவின் முறையே நம் ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

இந்திய மக்களின் உணவு முறைதான் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவர்களின் சத்தான உணவு முறையே அவர்களை ஆரோக்கியமாக  வைத்திருக்கிறது. சம்மணங்கால் போட்டு சாப்பிட்ட காலமெல்லாம் கடந்த தலைமுறையில் பழக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் டைனிங் டேபிள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் பல உணவகங்களிலும் நின்றுகொண்டு சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. திருமண நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு விருந்து உண்ணும் முறை நடைமுறைக்கு வந்து விட்டது . இந்த வளர்ச்சியினால் நாம் நமது கலாச்சாரத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டோம்.  மேலும்  உணவானது செரிமானத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு மாறிய வழக்கத்தால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு அதிக அழுத்தத்தை உருவாக்கி செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

Eating while standing ups stress, mutes taste buds | INDIA TRIBUNE

நின்றுகொண்டே சாப்பிடுவதினால் தேவையான அளவு உண்டு விட்டோமா என்று அறியாமல் அதிகமாக உணவினை சாப்பிட தூண்டும். ஆதலால் அமர்ந்துகொண்டு நிதானமாக சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும். நின்றுகொண்டே சாப்பிட்டால் உண்ட உணவானது 30% செரிப்பதை  அதிகரிக்கும். அதனால்  அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பசி  எடுக்க நேரிடும்.

கீழே அமர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். அத்துடன்  செரிமானத்திற்கும் எளிய வழியாக விளங்கும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் தவறான நேரங்களில் பசி எடுத்தல்  மற்றும்  அதிகமாக சாப்பிடுதல் போன்ற பிரச்சனைகள் வராமலிருக்கும். தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது. உணவிலிருந்து முழுமையான சத்துக்கள் உறிஞ்சுவதற்கு முன்  செரித்துவிடுவதால்  எஞ்சிய சத்துக்கள் குடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 

Categories

Tech |