நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கு சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலில் ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பல சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
உடலில் அதிக அளவு நீர் இருப்பதால், சிறுநீரகங்கள் செயலிழக்கும், அதே போல் நின்றபடி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தண்ணீரைப் பருகுவதற்கான சரியான வழி, எப்போதும் உட்கார்ந்து கொண்டு தண்ணீரைக் குடிப்பது தான் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நின்றபடி தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் மூட்டுகளில் இருக்கும் வேதிப்பொருட்களின் சமநிலை மோசமடைகிறது, இதன் காரணமாக மூட்டு வலியிலும், முதுகுவலியிலும் பிரச்சனை தொடங்குகிறது.