Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நிம்மதியான உறக்கம்… எலுமிச்சை செய்யும் மாயங்கள்..!!

இரவு தூங்கும் போது அருகில் எலுமிச்சை துண்டை வைத்து தூங்குங்கள். அதன் பலன் பற்றி அறிவோம்.

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் பொழுது அருகில் வைத்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.? சிலருக்கு தூங்கும் பொழுது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இதனால் தூக்கம் கெட்டுவிடும்.

இந்த தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க இரவில் தூங்கும் பொழுது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி சுவாசிக்கும் திறன் மேம்படும். மேலும் எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி சுத்தமான காற்றை வழங்குவதுடன் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.

அதேபோன்று எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்குகிறது .எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்து இருப்பது மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. ஏனென்றால் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதால் அதிலிருந்து வரும் நறுமணம்,

பூச்சிகள் நம்மை அண்டாமல் காக்கிறது. இரவு முழுவதும் அதன் காற்றை சுவாசிக்கும் பொழுது மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரமுடியும். மிக முக்கியமாக எலுமிச்சை பழத்தில் இருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரட்டோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து,

மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்கள் தோன்றவும் உதவுகிறது. இது எல்லாவற்றையும் விட ஒவ்வொரு நாளிலும் எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணத்தை நுகரும் பொழுது அது மனதை அமைதிப்படுத்துவதும், செயலில் முழு கவனத்தை செலுத்தவும் உதவியாக இருக்கும்.

இதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் முயற்சி செய்து பார்த்து பயன்பெறுங்கள்.

Categories

Tech |