தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இதனை 9 லட்சம் மாணவர்கள் எழுதயிருக்கிறார்கள். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வை 8.49 பச்ச மாணவர்கள் எழுதுகின்றனர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இந்த தேர்வை8.49 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். மாணவர்கள் ஒரு பக்கம் தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில் சில தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடத்தை எடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனால் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரியவந்துள்ளது. அவர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.