Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நியமனக்குழு தேர்தல்…. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்…. பெரும் பரபரப்பு….!!

காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையல் பேரூராட்சியில் நியமனக்குழு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலுக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட  பெரும்பாலானோர் வருகை தரவில்லை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் 1 சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் 5 பேர் மட்டுமே வருகை புரிந்தனர்.

இதனால் கோபமடைந்த 5 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |