Categories
சென்னை மாநில செய்திகள்

நியாபகம் வருதே… 2015 நியாபகம் வருதே… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு… பீதியில் சென்னை மக்கள்..!!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று மதியம் 12 மணிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை போது திடீரென அறிவிப்பு இன்றி ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானது என்பதை தெரியாது. இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது இன்னும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்போது 30 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ள நீர் புகுந்தது பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலம் வழங்கும் நிலைமைக்கு மோசமாக போனது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுகிறது. அதேநேரம் இம்முறை உரிய முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்ற போதிலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 24 அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. 22 அடி நிரம்பியதும் தற்போது ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |