நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரி செய்து கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இணைய வழி வாடகை சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஓலோ, உபேர் போன்ற இணைய வழி வாடகை வாகன நிறுவனங்கள் மீது பொதுமக்கள் புகார் அளிப்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக முக்கிய நாட்களில் கட்டணத்தை அதிகரித்துக் கொள்வது, பயணத்திற்கு முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்ய ஓட்டுநர்கள் கட்டாயப் படுத்தப் படுவது மேலும் பணத்தை ரத்து செய்தால் அதற்காக வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நியாயமற்ற வர்த்தக கொள்கைகளை இந்த நிறுவனம் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. மேலும் வாகன ரத்து கொள்கையும் நியாயமின்றி இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலைமையில் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நிதி கரே, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் போன்றோர் கலந்து கொண்டுண்டுள்ளனர். மேலும் அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ரோகித் குமார் சிங் பேசியபோது, உபேர்,ஓலோ போன்ற நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கின்றோம். மேலும் இது தொடர்பான புள்ளி விவரங்களையும் அவர்களிடம் அளித்திருக்கின்றோம்.
பொதுமக்கள் கூறும் புகார்களை திருத்திக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றோம் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நிதி கரே கூறும்போது, வாடகை சேவை நிறுவனங்கள் தங்கள் கொள்கையை திருத்திக் கொள்வதில் உறுதிப்படுத்துவதற்காக அந்த நிறுவனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளையும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்குப் பின் உபேர் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் நிதிஷ் பூஷன் கூறும்போது, இந்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்கின்றோம். மேலும் மக்களுக்கான சேவையை வழங்குவதே பிரதானமாகக் கருதுகின்றோம். எங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதில் உறுதியாக இருக்கின்றோம் என கூறியுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓலா, ரேபிடா, மேரு, ஜூக்னு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.