Categories
சினிமா தமிழ் சினிமா

நியாயம் இல்லாமல் விரட்டிட்டாங்க…. இழப்பீடு கொடுக்க வேண்டும்…. பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா வழக்கு….!!

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். 

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா அவர்கள் இசை அமைத்து வருகிறார். இளையராஜாவை அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.எனவே ஸ்டுடியோவின் உரிமையாளர்களான சாய்பிரசாத் மற்றும் ரமேஷ் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இளையராஜாஅவர்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .

இளையராஜா தனது மனுவில் கூறியிருப்பதாவது “ஸ்டூடியோவில் தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்ல அவர்கள் அனுமதிக்காமல் என்னை வெளியேற்றியது நியாயம் இல்லாதது. தனது பொறுப்பில் இருக்கும் ஒளிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவவிற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  இது குறித்து விசாரித்த  நீதிபதி  சதீஷ்குமார்,  டிசம்பர் 17-ம் தேதிக்குள் இந்த மனுக்குறித்து பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டுடியோவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு அளித்துள்ளார் .

Categories

Tech |