Categories
மாநில செய்திகள்

நியாயம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுமை…. நலம் விசாரித்த டி.ஜி.பி…. குவியும் பாராட்டு….!!!

டி.ஜி.பி சைலேந்திர பாபுவை  பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்விகி நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பள்ளி வாகனம் ஒரு பெண்ணின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதைப்பார்த்த மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது தொடர்பாக நியாயம் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த ஒரு போக்குவரத்து காவலர் மோகன சுந்தரத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இவர் மோகன சுந்தரத்தை தாக்கிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் காரணமாக போக்குவரத்து காவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி போக்குவரத்து காவலரை கைது செய்து தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் மோகன சுந்தரத்திடம் டி.ஜி.பி சைலேந்திரபாபு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நலம் விசாரித்துள்ளார். அதன்பின் டி.ஜி.பி போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக மோகனசுந்தரத்திடம் தெரிவித்தார். இதன் காரணமாக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை  பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது தொடர்பாக நியாயம் கேட்டபோது, போக்குவரத்து காவலர் அந்த பள்ளி வாகனம் யாருடையது தெரியுமா என மோகனசுந்தரத்திடம் கேட்டுள்ளார். அதன்பின் மோகன சுந்தரத்தின் செல்போனை வாங்கி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்போனை கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்ததாக மோகனசுந்தரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |