Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை”…. எழுந்த புகார்… அலுவலகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை…!!!!

நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்ததையடுத்து ஆட்சியர் அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு சீனிவாசநகரில் இருக்கும் நியாய விலை கடையில் பாமாயில் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கிறதா என கேட்டுக்கொண்டார். இதையடுத்து உணவு விநியோகப் பிரிவு துணை பதிவாளர் அலுவலகத்திற்கு ஆட்சியர் சென்று மாதம்தோறும் உணவு பொருட்கள் சரிவர வழங்கப்படுகின்றதா என பதிவேடுகளை பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு நியாய விலை கடையில் உணவுப் பொருட்கள் சரியாக வழங்குவதை கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் துறை உறுதி செய்வதுடன் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்துறை பொருட்களை ரேஷன் கடைக்கு வழங்குவதை சரியான காலங்களில் வழங்க வேண்டும். இதுபோல் மக்கள் மீண்டும் நியாய விலை கடையில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |