நியாயவிலைக் கடை ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக 3 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தினாலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் எந்த சிக்கல்களும் ஏற்படாத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நியாயவிலைக் கடை ஊழியர்களின் போராட்டம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். எனவே உங்களுடைய கோரிக்கைகள் குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று நியாயவிலைக் கடை ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.