Categories
மாநில செய்திகள்

நியாயவிலை கடைகள் மூலமாக…. 8.4 லட்சம் முகக்கவசம் விநியோகம் – முதல்வர் பழனிச்சாமி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் அனைத்து அமைச்சர்களுடனும் ஆலோசனையா நடத்தினார். அப்போது, அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் இரண்டு வாரத்திற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகள் மூலம் 8.4 லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |