Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நியூசிக்கு எதிரான டி20… கோலிக்கு ஒய்வு…. கேப்டனாக களமிறங்கும் ரோகித்… இந்திய அணியில் யார் யார்?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல் ராகுல் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர். விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. நவம்பர் 17, 2021 முதல் இந்தியா 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஆர் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

 

நவம்பர் 23, 2021 முதல் ப்ளூம் ஃபோன்டைனில் தொடங்க உள்ள தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியையும் கமிட்டி தேர்வு செய்தது. சுற்றுப்பயணத்தின் போது அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி: பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் பாடிக்கல், சர்பராஸ் கான், பாபா அபராஜித், உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), கே.கௌதம், ராகுல் சாஹர், சவுரப் குமார், நவ்தீப் சைனி , உம்ரான் மாலிக், இஷான் போரல், அர்சான் நாக்வாஸ்வல்லா.

 

Categories

Tech |