தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.அண்மையில் மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு சாா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். இதன் காரணமாக நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.