Categories
உலகசெய்திகள்

“நியூயார்க்கில் டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்ட தேசிய கொடி”… பார்வையாளர்களை கவர்ந்தது..!!!!

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம் சதுக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க்  மெட்ரோபாலிடன் பகுதிக்கான  இந்திய கூட்டமைப்பும் சம்மேளம்  ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரம் மேயர் ஏரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாந்த் மற்றும் சங்கர் மகாதேவன் போன்றோரும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் பாடகர் சங்கர் மகாதேவன் நாட்டுப்புற பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து இந்திய வம்சா வழியினரும் உணர்ச்சிபூர்வமுடன் இசைகேற்ப  அசைந்து ஆடியபடி பாடலை பாடியுள்ளனர். நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்திய தேசிய கீதம் பாடியுள்ளார். மூவர்ண கொடியை ஏற்றும்போது அதனை காண மக்கள் குவிந்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற உலக வர்த்தக மையத்தில் இருந்த தேசியக்கொடியானது டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories

Tech |