Categories
உலகசெய்திகள்

நியூயார்க்கில் பரபரப்பு…. அடுத்தடுத்து சீக்கியர்களை குறிவைக்கும் கும்பல்…!!!!!!!

நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் செல்ல வேண்டுமென தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாலையில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை மர்மநபர்கள் கம்பால் தாக்கி அவர்களின் தலையில் கட்டப்பட்டிருந்த முண்டாசு களை அழித்து ரகளையில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டர்  பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும் இந்த தாக்குதல் வருந்தத்தக்கது. நாங்கள் காவல்துறையினருடன் தொடர்புகொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டிருக்கிறது.இந்த தாக்குதலுக்கு நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிசியா ஜேம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது, “ரிச்மண்ட் ஹில்லில் நமது சீக்கிய சமூகத்திற்கு எதிரான மற்றொரு வெறுப்பூட்டும் தாக்குதல் இது. இதற்கு காரணமான இருவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது  பற்றி  தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |