நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் உங்களுக்குள் உள்ள ஒளியை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய முற்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளியை பற்றி விடுமுறையாக மாற்றியதற்காக ஆடம்ஸூக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ் வால் நன்றி கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி பள்ளி விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்திய அமெரிக்க சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதன் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் இந்திய நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்கவும் கொண்டாடவும் முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் பேசும் போது நியூயார்க் நகரம் முழு உலகத்திற்கும் தாயகமாக இருக்கிறது. நியூயார்க் நகரம் அனைத்து சமூகங்களை சேர்ந்த குழந்தைகளுக்கும் சொந்தமானது அனைத்து சமூகங்கள் மற்றும் பின்னணியை சேர்ந்த குழந்தைகள் இங்கு பள்ளிக்கு செல்கின்றார்கள். அதனால் நமது இளைஞர்கள் அவர்களது குடும்பம் மற்றும் அவர்களின் நம்பிக்கையை நாம் மதிப்பதும் அங்கீகரிப்பதும் முக்கியம் எனக் கூறியுள்ளார்.