Categories
உலக செய்திகள்

“நியூயோர்க்கில் தலையில்லாத உடம்பு கரை ஒதுங்கியது”… அதிர்ச்சியில் மக்கள் ..!!

நியூயார்க்கில் கடலிலிருந்து கரை ஒதுங்கிய தலையில்லாத உடலை கண்ட ஜாகிங் செல்லும் நபர் போலீசில் தெரிவித்துள்ளார் . 

நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் தலை, கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத உடம்பு கடலிலிருந்து  கரை ஒதுங்கியுள்ளது. இதனை ஜாக்கிங் சென்ற நபர் பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதமுள்ள பாகங்களை தேடியும்  கிடைக்கவில்லை.

மேலும் அந்த இறந்த நபர் கை, கால்கள் வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் தண்ணீரில் அதிக நேரம் இருந்ததால் உடலில் உள்ள பாகங்கள் பிரிந்ததா என்பது பற்றி போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |