நியூ கலிடோனியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூ கலிடோனியா தீவில் டானில் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மேலும் இது குறித்து பிலிப்பைன்சில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.