மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு ஏராளமானோர் மீன்களைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அங்கு அமைந்துள்ள கண்மாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கிராமமக்கள் இணைந்து மீன் பிடிக்கும் திருவிழாவை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பிரான்மலை , வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, தேனம்மாள்ப்படி ,முடடாக்கப்பட்டி, பெருமாள்பட்டி, போன்ற கிராமங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் திருவிழாவில் கலந்து கொண்டு மீன்களை பிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் கட்லா ,கெண்டை, போன்ற மீன்களை பிடித்துள்ளனர்.