பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியாறு அணை பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் நீர்பாசன வசதி பெறுகின்றன.ஆழியாறு அணை தென்மேற்கு பருவ காலங்களில் நிரம்பி விடுகின்றன.
இதைப்போன்று இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆழியாறு அணையில் 120 உயரத்தில் 119 அடிக்கு நீர் இருப்பு இருந்து வருகின்றது.ஆழியாறு அணையில் நீர்வரத்து ஏற்பட்டதால் அப்பர் ஆழியாறு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக 1400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அணையில் உள்ள 11 மதகுகளிலும் திறந்து விடப்பட்டு அதன் வழியாக தண்ணீர் பாய்ந்து வெளியேறி சென்றது. இந்த தண்ணீர் திறப்பின் கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் ,உதவி செயற்பொறியாளர் லீலா , உதவி செயற்பொறியாளர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் கண்காணித்து வருகின்றனர்.